லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 64வது திரைப்படம் “மாஸ்டர்”. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் இல்லை என்றால் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியிடப்படுவதாக திட்டமிட்டிருந்தது படக்குழுவினர்.
இதனால் நோய்த்தொற்று பிரச்சனைகள் சரியான பின்பு வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியிடப்படுகிறது என்ற தகவல் வெளியானதால், ‘என்னுடைய படம் திரையரங்குகளுக்கு மட்டும்தான். ஓடிடி வெளியீட்டுக்கு அல்ல’ என்று நடிகர் விஜய் கூறியிருந்தார். இதன்மூலம் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என உறுதியானது.
இதற்கிடையில் இன்று ஆகஸ்ட் 4 காலை நான்கு மணி அளவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து செய்தி வெளியாகியிருந்தது. அதில், ஆகஸ்ட் மாத வெளியீடு என்று ஒரு புகைப்படத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தேதிவாரியாக வெளியிடப்படும் படங்களின் பட்டியல் இருந்தது. அதில் மாஸ்டர் படத்தின் பெயரும் இருந்தது. இதன்மூலம் மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் பரவியது.
It's late March so we figured now would be a good time to catch you up on some new releases also CHEMICAL HEARTS. pic.twitter.com/e3crTY4TkH
— Prime Video (@PrimeVideo) August 3, 2020
இது தொடர்பாக செய்தியாளர்கள் மாஸ்டர் பட குழுவினரின் தரப்பில் விசாரித்தபோது, இன்னும் மாஸ்டர் படத்தின் இறுதிக் காட்சியின் ஃபைனல் குட் எடுக்கவே இல்லை, படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறினர்.
இதன்பிறகு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான செய்தியினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது.