தாலி கயிறு மாற்றும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?

0
664

திருமணமான பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மிக முக்கியமான ஒன்று தாலி. இன்றைக்கு சிலர் தங்கத்தில் தாலி அணிகின்றனர். இருப்பினும் பலர் மஞ்சள் கயிற்றில்தான் தாலியை அணிகின்றனர்.

தாலிக்கயிற்றில் அழுக்கு இருந்தாலோ அல்லது மங்கி இருந்தாலோ, மாங்கல்யம் பழுது பட்டாலோ அதனை மாற்ற வேண்டி இருக்கிறது.

அப்போது நாம் மிக முக்கியமாக  கடைபிடிக்க  வேண்டிய விஷயங்கள்  சில  இருக்கிறது. மாங்கல்யம் மாற்றுவதாக இருந்தாலோ அல்லது தாலிக்கயிரை மாற்றுவதாக இருந்தாலோ திங்கள், செவ்வாய் வியாழக்கிழமைகளில்தான் செய்ய வேண்டும். இந்த மூன்று நாட்கள் மட்டுமே தாலிக் கயிறு மாற்ற சரியான நாட்கள். 

கோவிலுக்கு சென்று அங்கு மாற்றும் போது, கோவிலினுள் கிழக்கு பக்கமாக அமர்ந்தபடி மாற்றுவது நல்லது.

மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் தாலி கயிறில் ஊக்கு, சாவி போன்றவற்றை தொங்கவிடக் கூடாது.

ராகு, எமகண்டம் நேரத்தில் தாலி கயிறு மாற்றுதல் நிகழ்வை மேற்கொள்ளக் கூடாது.

அதே போன்று அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை ஏற்படும். எனவே  சரியான தருணத்தில் தாலி கயிறை மாற்றிக் கொள்வது நல்லது.

இவற்றைப் பின்பற்றினால், அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

Previous articleஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்!
Next articleகுழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here