ஏ.எல்.எல் முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவர் பதவி வகித்தவர் அண்ணாமலை. 2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.
இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அண்ணாமலை மாற்றப்பட்டு தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டர். தற்போது அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என பாஜகவினர் சொல்கிறார்கள்.
இந்நிலையில், குணச்சிதிர மற்றும் காமெடி நடிகருமான தம்பி ராமையா அண்ணாமலை பற்றி பேசியபோது ‘ அண்ணாமலை தம்பியை நான் வியந்து பார்க்கிறேன். என்னடா இது ஒரு சாதாரண விவசாயி மகனா பிறந்து ஐ.பி.எஸ் படிக்கிறதே பெரிய விஷயம். அத சாதரணமா பண்ணிட முடியாது. ஆளு வாட்டசாட்டமா இருக்கணும். அறிவா இருக்கணும். 9 வருஷம் வேலை செஞ்சிட்டு அந்த புள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ்ல இருக்கான். திடுதிப்புன்னு தேசிய கட்சி. அங்க கொட்ட போட்ட 60,70 வயது ஆளெல்லாம் இருக்காங்க.. அவங்கள் எலலம் அடிச்சி துவம்சம் பண்ணிட்டு உள்ள வந்து நிக்குறாரு.. அடேங்கப்பா இவர மாதிரி நாம சாதிக்க முடியாதுடா சாமி.. கட்சியை 14 சதவீதம் ஏத்தி வச்சிருக்காரு அந்த புள்ள’ என பாராட்டி பேசியிருக்கிறார்.