2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.
அதாவது, இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.
ஆனால், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.
தற்போது அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாலரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரையும் இந்த கருத்தை உறுதி செய்திருக்கிறார். செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ‘கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சரியாக சொல்லி இருக்கிறார். சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது அமைந்ததே இல்லை. பாஜக கூட்டணி மட்டும்தான். ஆட்சியில் அவர்களுக்கு பங்கு கொடுக்க முடியாது’ என சொல்லியிருக்கிறார். கூட்டணி ஆட்சி இல்லை என பழனிச்சாமி பற்றவைத்த நெருப்பு இன்னும் பல நாட்கள் எரியும் என எதிர்பார்க்கப்படுகிற்து.