யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி!

0
112

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி!

நடிகர் யோகி பாபு மண்டேலா வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் அவர் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கும் படங்களில் கூட அவரை மையப்படுத்தி விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடிக்க வில்லனாக கௌதம் மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.