தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் 94 ஆவது குருபூஜை விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது ஆப்பர் வீதி உலா நடைபெற்ற நிலையில், வீதிகளில் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதால் அதன்மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 11 பேர் உயிரிழந்தார்கள். சிலர் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை எழுப்பியிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில, அரசுகள் அனுதாபங்களை தெரிவித்ததுடன் நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கின்றன.அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்.
இந்த சூழ்நிலையில், இந்த விபத்தின் போது ஓர் அடி அகல நிலத்திற்காக 10 வருட காலம் பேச்சுவார்த்தையின்றியிருந்த நிலையில் உறவுக்கார சிறுவன் மாமா என்றழைத்த ஒரு வார்த்தைக்காக முதியவர் ஒருவர் ஓடிவந்து உயிரைவிட்ட சம்பவம் அந்த கிராமத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் மாநகரம் அருகேயிருக்கும் களிமேடு கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் விவசாயியான இவருக்கு திருமணமாகி ராஜ்குமார் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள் இவரது சொந்த தாய் மாமன் அண்டை வீட்டில் வசித்துவரும் சாமிநாதன் விவசாயி சாமிநாதனும், முருகேசனும், அருகருகேவுள்ள வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அப்பர் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேரை தள்ளி கொண்டு சென்ற முருகேசனின் மகன் ராஜ்குமார் மின் விபத்தில் சிக்கியிருக்கிறார்.
அப்போது சாமிநாதன் தேர் திரும்புகின்ற இடத்திற்கு 100 அடியை கடந்து இருக்கின்ற ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.
தன்னுடைய தந்தை முருகேசன் அழைப்பதைப் போன்று அவருடைய மகன் ராஜ்குமார் சாமிநாதனை பார்த்து மாமா என்று அபயக்குரல் எழுப்பியிருக்கிறார்.
அதனைக் கேட்டு அதிர்ந்து போன சாமிநாதன் ராஜ்குமாரை காப்பாற்ற சென்ற போது தரையின் ஈரத்தில் பாய்ந்த மின்சாரம் உடலில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சாமிநாதன் பலியானார்.
அவரை காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்த சிறுவன் ராஜ்குமாரும் பரிதாபமாக பலியானார். 6 அடி அகல நிலத்திற்காக பல வருட காலம் பகையிலிருந்த குடும்பம் உறவென்று சொல்லி அழைத்த காரணத்தால் ஓடோடி வந்து உயிரையிழந்த சாமிநாதன் கதையை சொல்லி அந்தப் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.