8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்! நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
52

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அவ்வாறு செயல்படாததால் இன்றளவும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? என்று பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

அந்த விதத்தில், நாகை மாவட்டம் வெளிப்பாளையம் அருகே நம்பியார் நகர் நடு தெருவை சேர்ந்தவர் வெற்றி செல்வம் மீன்பிடி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமியிடம் கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த சில ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயார் வழங்கிய புகாரினடிப்படையில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வெற்றி செல்வத்தை கைது செய்தார்கள். இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி தமிழரசி சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டுக்காக வெற்றி செல்வத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் தாக்குதல் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து உத்தரவிட்டார்.