மனைவியை தொந்தரவு செய்த வாலிபரை சரமாரியாக வெட்டிய கணவன் தடுக்க வந்த தந்தைக்கும் அரிவாள் வெட்டு! தஞ்சை அருகே பயங்கரம்!

Photo of author

By Sakthi

தஞ்சையில் மனைவியை கிண்டல் செய்த வாலிபரின் தலையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற வாலிபரின் தந்தையின் கை துண்டாக்கப்பட்ட து.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த அஜித் வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார் என சொல்லப்படுகிறது.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது இவருடைய மனைவியை அதே பகுதியைச் சார்ந்த அஜித் என்பவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஜய்யிடம் தன்னுடைய மனைவி புகார் வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜய் பலமுறை அஜீத்தை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இது குறித்து விஜய் தன்னுடைய நண்பர்களுடன் ஒன்றிணைந்து அஜித்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது இருவருக்கும் தகராறு முற்றி கைகலப்பாகியிருக்கிறது.

அந்த சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜீத்தின் நடு தலையில் வெட்டியிருக்கிறார் திவாகர் இதில் அஜித் பலத்த காயமடைந்தார்.

மகன் தாக்கப்படுவதை தடுக்க முயற்சி செய்த அஜித்தின் தந்தை ராஜகோபால் அவர்களுக்கும் வெட்டு விழுந்திருக்கிறது. அவருடைய இடது கை மணிக்கட்டுடன் துண்டானது, உடனடியாக அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கப்பட்டது.

அதன் பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான விஜய் மற்றும் திவாகர் உள்ளிட்ட இருவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.