ஊழலுக்கு துணை போனது யார் என்று எல்லோருக்கும் தெரியும்! ஸ்டாலின் நறுக் பதில்!

0
143

எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வந்திருக்கிறார்.

இதற்கு இடையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு திமுகவின் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றி. வரும் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் திமுகவின் பொதுக்கூட்டத்தில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு திட்டத்தினை நான் பிரகடனப்படுத்த இருக்கின்றேன். பத்து வருடத்திற்குள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளும் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள், போன்றவர்கள் பல கட்டங்களாக நடத்த பட்டிருக்கும் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றுவதில் இருந்து திமுக எப்பொழுதுமே ஒதுங்கி இருந்தது இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் ஸ்டாலின்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதி மக்களிடமும் தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை சேர்க்கை இருக்கின்றோம். ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா துறைகளையும் முன்னேற வைப்பேன். இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி மாற்றமானது தமிழ்நாட்டில் நிகழும் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களின் கேள்விக்கு திமுக தொடர்பாக நரேந்திர மோடி பேசினார், நேற்று அமித்ஷா பேசியிருக்கிறார். இனிமேல் பாஜகவில் இருந்து வரக்கூடிய எல்லோரும் அதை தான் பேசுவார்கள் ஊழலில் ஊறிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு ஊழல் செய்ய யார் துணை நிற்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

Previous articleஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!
Next articleவன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?