சொன்ன சொல்லை காப்பாற்றாத கமல்: தர்ஷனின் அதிர்ச்சி வீடியோ

Photo of author

By CineDesk

சொன்ன சொல்லை காப்பாற்றாத கமல்: தர்ஷனின் அதிர்ச்சி வீடியோ

CineDesk

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போது தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தர்ஷன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தையும் தர்ஷனிடம் அவர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்த தர்ஷன் எந்தவித அழைப்பும் வராததை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஒரு மிகப்பெரிய நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முழு விபரங்கள் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்க போவதாக கமல் தான் கூறிய சொல்லை காப்பாற்றாததால் தான் தர்ஷன் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது. ஆனால் கமல் தயாரிப்பில் தர்ஷன் நடிப்பில் உருவாகும் படம் விரைவில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/B7vx1j1h4jQ/?utm_source=ig_web_copy_link