தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Parthipan K

தாசில்தாரை எரித்துக்கொன்ற கொடூரம் நாட்டையே அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணி புரிந்து வந்தார் விஜயா ரெட்டி!

நிலப்பிரச்சனைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர் வட்டாட்சியர் விஜயா ரெட்டி அறைக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

வழக்கமான புகார் தொடர்பான விஷயங்களில் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று அலுவலக அதிகாரிகள் தங்களது பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
திடீரென அறைக்குள் இருந்து ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்ற விஜயா ரெட்டியின் மரணக்குரல் கேட்டதை தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடிவந்த பணியில் இருந்த ஊழியர்கள் தாசில்தார் அறை கதவை திறந்து பார்த்த போது விஜயா ரெட்டி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் மீதும் தீப்பற்றியதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஊழியர்கள் வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து அலுவலகத்திலேயே துடிதுடித்து கொடூரமான முறையில் உயிரிழந்தார்.

வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை இளைஞர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அவரை கைது செய்துள்ள போலீசார், விஜயா ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கா ரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், எதற்காக விஜயா ரெட்டியை இளைஞர் கொலை செய்தார் என்பதை தங்களது பாணியில் விசாரணையை துவக்கி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.