அது மட்டும் முடியவே முடியாது! திட்டவட்டமாக மறுத்த இலங்கை அதிபர்!

Photo of author

By Sakthi

இலங்கை சீனாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டது இதன் காரணமாக, சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை அந்த நாடு கொள்முதல் செய்ய தொடங்கியது. இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படதொடங்கியது.

இந்த பொருளாதார நெருக்கடியின் நீழ்ச்சியாக இலங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்தனர். அதேபோல பெட்ரோல், டீசல், காய்கறி என்று அனைத்து பொருளும் கடுமையான விலை உயர்வை சந்தித்தது.

ஆகவே அரசாங்கத்தின் மீது கோபமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடத் தொடங்கினர். இதனை தொடர்ந்து இலங்கை பிரதமர் பதவியை வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ரனில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அவர் பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் கூட அங்கே அத்தியாவசியப் பொருட்களுக்கு இன்னமும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அவர் இலங்கையின் பிரதமராக மட்டுமல்லாமல் நிதி துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். ஆகவே அவர் எப்படி இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிப்பார் என்று ஒட்டுமொத்த நாடும் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் குடும்பம்தான் என்று தெரிவித்து அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பொதுமக்களின் நெருக்கடி அதிகரித்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று பதவி விலகி தலைமறைவானார்.

இந்த சூழ்நிலையில், தோல்வியடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என்று அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

5 வருடங்கள் ஆட்சி செய்ய பொதுமக்கள் தனக்கு ஆணையை வழங்கி இருப்பதாகவும், மீதமிருக்கின்ற 2 வருட காலத்தையும் ஆட்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் 1 வருட காலத்திற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த அந்த நாட்டு அதிபர் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்தியா, சீனா, உள்ளிட்ட நாடுகளிடம் உதவியை கேட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.