தமிழகம் முழுவதும் உடனடியாக இதை செய்தாக வேண்டும்! பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அதிரடி உத்தரவு!

0
99

நமக்கு அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கல்வி கற்றோரின் சதவீதம் நம்மைவிட அதிகமாக இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் தேசிய அளவில் கல்வி கற்றவர்கள் அதிக சதவீதத்தில் இருப்பது கேரளாவில்தான் என்ற பின்பம் இருந்து வருகிறது.

ஏன் அந்த சாதனையை நம்மால் செய்துவிட முடியாதா என்று கேட்டால் அப்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கே அரசியல் ரீதியாகவே கல்வித்துறையில் பலவிதமான குளறுபடிகள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது தேர்தல் முதல் கொண்டு அனைத்திலும் ஜாதி இருக்கிறது, ஆனால் ஜாதி என்ற ஒன்று இல்லை என ஒரு கும்பல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ஜாதியை வைத்து தான் அவர்களுடைய பிழைப்பே நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படியல்ல நம்முடைய மற்றொரு அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் பலவித சாதிப் பிரிவினர் இருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் சரி சமமான உரிமை கல்வி உட்பட அனைத்திலும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை மாறாக இந்த ஜாதியை வைத்து அரசியல் வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னமும் சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் ஜாதி என்று ஒன்று இல்லை என்றால் அரசியலே செய்ய முடியாது என்ற சூழ்நிலை தான் தற்போது காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தான் தமிழகத்தில் படிப்பறிவற்ற பல பேர் இருந்து வருகிறார்கள். ஆனால் தமிழக மாணவர்கள் அனைவரும் புத்திசாலிகள் தான் புத்திசாலித்தனம் இருந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்ற தகுதியுடைய இடம் கிடைப்பதில்லை.

அதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளும் இந்த சாதிப் பிரிவினையும் என்றால் இந்த சாதிப் பிரிவினை என்பது எங்கிருந்து தொடங்குகிறது என்று கேட்டால் இந்த பள்ளிகளில் இருந்துதான்.

ஜாதி இருக்கிறது என்று சொல்லி அந்தந்த ஜாதிக்குண்டான உரிமைகளை அவரவர்களுக்கு வழங்கி விட்டால் யாருக்கும் எந்த பிரச்சனையுமிருக்காது.

அவரவருக்கு அவரவர் தேவை பூர்த்தியாகி விடும் ஆனால் தமிழக அரசியல்வாதிகள் அப்படி செய்வதில்லை. மாறாக அதை வைத்து அரசியல் செய்து கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லா இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாக சென்று கண்டறிந்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் எல்லோரும் கல்வி கற்பதை உறுதி செய்யும் விதத்தில் மூன்று மாத பயிற்சி வழங்கி இயலாமையை பொருத்து பள்ளி அல்லது வீடு வழியாக கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்

. இதற்கான நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.