சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு!
பாஜகவின் பெண் நிர்வாகியை அவதூறாக பேசியது முடிவு பெறாமல் அடுத்தடுத்த பிரச்சனை நோக்கியே செல்கிறது. முதலில் திருச்சி சிவா மீது குற்றம் சுமத்தி வந்தவர்கள் தற்பொழுது அனைத்திற்கும் காரணம் பெண் நிர்வாகி டெய்சி தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலைக்கு மிகவும் அழுத்தமான சூழ்நிலை தற்பொழுது உள்ளதாக கூறுகின்றனர். திமுகவை விட்டு வந்த திருச்சி சூர்யா சிவா தென் மாவட்டங்களில் அனைவரும் அறிவும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளார்.
இவ்வாறு இவர் வளர்ந்து வருவது கட்சிக்குள்ளேயே இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. இவரை எப்படியாவது தாக்க வேண்டும் என்ற நோக்கில் இவர் மீது எறியப்பட்ட கல் தான் சிறுபான்மையினர் கட்சி தலைவி டெய்சி. இந்த வீடியோ ரிலீஸ் ஆகுவதற்கு முன்பாகவே டெய்சி தான் முதன் முதலில் திருச்சி சிவாவை அவதூறாக பேசியுள்ளார். ஆனால் அந்த வீடியோ வெளிவராமல் திருச்சி சிவா பதிலுக்கு பேசிய வீடியோ மட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இதனை அறிந்த அண்ணாமலை சிறுபான்மையினர் அணி தலைவி டெய்சியை கூப்பிட்டு, நீங்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள். உங்களால்தான் எல்லா பிரச்சனையும் என்று அவரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக திருச்சி சிவாவை அழைத்து விசாரிக்கையில் நான் மட்டும் இவ்வாறு பேசவில்லை பல நிர்வாகிகள் பெண்களை அவதூறாக தான் பேசியுள்ளார்கள். அந்த ஆடியோக்கள் என்னிடம் உள்ளது. என்னை தண்டிக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அதனையும் நான் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட அண்ணாமலை திக்கு முக்காடியுள்ளார்.பொதுவாக கட்சிக்குள் ஏதேனும் பிரச்சனை நடந்தால் வெளியே கொண்டு போகாமல் கற்றுக்கொள்ள முடிப்பது தான் சிறந்தது. ஆனால் திருச்சி சிவா சொல்வது போல் செய்தால் பாஜக பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிடும். இதனை தடுக்க இருவரையும் கூப்பிட்டு சுமுகமாக செல்லும்படி தெரிவித்துள்ளாராம். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் டெய்சி என்பதால் தற்பொழுது அவர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் இவரால் தற்பொழுது மருத்துவமனை நடத்த முடியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். அண்ணாமலை ஓர் பேட்டியில் பெண்களை இழிவாக பேசினால் அவர்களின் நாக்கு துண்டிக்கப்படும் என்ற வீரவசனம் பேசினார். இந்த வீர வசனம் நடைமுறையில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் நேரடியாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வாறு நாக்கு துண்டிக்கப்படும் என்று பேசியவர் ஏன் இந்நாள் வரை திருச்சி சூர்யா சிவா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.