அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்?

0
277
#image_title

அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்?

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் முன்னணி மாஸ் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர்.அதேபோல் தனக்கு போட்டி நடிகர் இவர் தான் என்பதை தாங்கள் நடிக்கும் படத்தின் பஞ்ச் டயலாக் மூலம் சூசகமாக சொல்லி வருகின்றனர்.இது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு என்றாலும் இதில் பஞ்ச் வசனங்கள் மூலம் அதிகளவு மாறி மாறி தாக்கி கொண்ட நடிகர்கள் என்றால் அது தனுஷ் மற்றும் சிம்பு தான்.

பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு 1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.தன் தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த சிம்பு 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இவர் கதாநாயகனாக மட்டும் இதுவரை 47 படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல் தனுஷ் அவர்கள் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார்.தற்பொழுது வரை 49 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷ் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனுஷ் மற்றும் சிம்புவிற்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை இருவருமே 2002 ஆம் ஆண்டில் கதாநாயகனாக அறிமுகமானார்கள் என்பது தான்.80,90களில் ரஜினி மற்றும் கமலை போட்டியாளர்களாக அவர்களது ரசிகர்கள் கொண்டாடினர்.அதேபோல் 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் விஜய் மற்றும் அஜித்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்படத் தொடங்கியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் தனுஷ் மற்றும் சிம்புவிற்கு இடையே போட்டி உருவாகத் தொடங்கியது.தங்களின் படங்கள் மூலம் ஒருவரை ஒருவர் பஞ்ச் வசனங்களால் தாக்கி கொண்டனர்.

இப்படி பரம எதிரிகளாக இருந்து வரும் தனுஷ் மற்றும் சிம்பு அவர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்தனர் என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற “வடசென்னை” படத்தில் தான் இருவரும் நடிக்க இருந்தனர்.

2012 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.முதலில் தனுஷின் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.அப்பொழுது சிம்பு வேறு ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருந்தார்.அதன் பின்னர் சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.இதனால் சிம்புவால் நடிக்க முடியாமல் போக அப்படம் கைவிடப்பட்டது.

மீண்டும் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்து விடலாம் என்ற வெற்றிமாறனின் முயற்சி கைகூடாமலே போய்விட்டது.பின்னர் வடசென்னை கதையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தனுஷ்,அமீர்,சமுத்திரக்கனி,டேனியல் பாலாஜி,கிஷோர்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

முதலில் எடுக்கப்பட இருந்த வடசென்னை படத்தில் தனுஷ் ஹீரோவாகவும், சிம்பு வில்லனாகவும் நடிக்க இருந்தனர்.சிம்பு இதில் ‘ராஜன்’ கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்
Next articleபல நடிகைகளுக்கு லிப் கிஸ்.. அதற்காக நிர்வாணமாக நின்றவர் அந்த நடிகர்!! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!!