PMK TVK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” பட புரோமோஷனுக்காக தவெக விஜய்-யை சந்தித்து பாராட்டை பெற்றுள்ளார்.
பாமக தலைவரின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தற்பொழுது தயாரிப்பாளர் டி சபரிஷுடன் இணைந்து “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இந்த கதையானது கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான எல்லையில் கொட்டப்படும் கழிவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியுள்ளனர்.குறிப்பாக இவரது இரண்டாவது மகள் என்று பெரும்பாலும் கடந்த மக்களவை தேர்தலில் தான் அறியப்பட்டது. அந்த அளவுக்கு இவரது பிரச்சாரமானது இருந்தது,
மக்களையும் கவர்ந்தது . இவ்வாறு இருக்கும்போது தனது பட வெளியீட்டு புரோமோஷனுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-யை சந்தித்துள்ளார். இவர்களது இந்த சந்திப்பு திடீரென்று அமைந்ததால் அரசியல் பார்வையில் பேசும் பொருளாகியுள்ளது. முன்னதாக விஜய் தனது மாநாட்டில் கட்டாயம் கூட்டணி ஆட்சி தான்,அதிகாரத்தில் சம பங்கு எனக் கூறியதோடு பேனர்களில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் அவர்களின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இது அனைத்தும் பாமக-வை கூட்டணியில் கொண்டு வர தான் என கூறி வந்தனர். மேற்கொண்டு அவரது மகள் தயாரித்த அலங்கு படத்திற்காக விஜய்-யை சந்தித்துள்ளார். அவரிடம் ட்ரைலர் போட்டுக் காட்டப்பட்டு, “சூப்பர் மா” என்ற வாழ்த்துக்களையும் பெற்றார்.
இவ்வாறு அவர் திடீரென்று விஜய்-யை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சினிமா பாணியில் பார்க்கும் பொழுது இவர் ரஜினியிடமும் தனது ப்ரோமோஷன் காக பேசி ட்ரைலரை காண்பித்து வாழ்த்துகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.