50 வயதான ‘தக்கத் தையா தையா’ பாடல் நாயகிக்கு 37 வயதுடைய பிரபல நடிகருடன் டும் டும்! இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பதிவு!
சினிமா திரையுலகில் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து வருவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது மலைக்க அரோராவும் பாலிவுட் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூர் உள்ளனர். நடிகை மலேகா அரோரா ஷாருக்கான் நடித்த உயிரே படத்தின் தக்க தைய தையா பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அதேபோல அர்ஜுன் கபூர பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் உடைய மகன் ஆவார். இவரும் பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டுமின்றி தற்போது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னையும் தக்க வைத்து வருகிறார். மலைக்கா அரோரா 1998 ஆம் ஆண்டு சல்மான் கானின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இருப்பினும் இருவருக்கும் மனம் ஒத்து வராததால் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அவரை விவாகரத்து செய்தவுடன், தயாரிப்பாளர் போனி கபூர் மகனான அர்ஜுன் கபூரை காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் அர்ஜுன் கபூரிடம் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று கூறினார்.
ஆனால் தற்பொழுது இவர்களுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக அரோரா இன்ஸ்டாகிராமில் ஓர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது தற்பொழுது இணையத்தையே கலக்கி வருகிறது. நான் சமதித்து விட்டேன் எனக்கூறி ஹார்ட்டின் எமோஜிகளையும் அத்துடன் சேர்த்து போட்டு உள்ளார். இவர் ஏன் இப்படி பதிவு போட்டுள்ளார்? இவர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுவிட்டாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
நான்கு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் தற்பொழுது திருமணத்திற்கு தயாராகி விட்டனர் என நினைத்து பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஆனால் மலைக்கா அரோரா அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதில் மகனை வைத்துக்கொண்டு, 49 வயது நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 12 வயது குறைந்தவருடன் திருமணமா என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.