நெல்லையில் நடத்தப்பட்ட கொலை இது தான் காரணம்!! குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்!!

0
113
The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote
The accused revealed the reason for the murder in Nellai court premises through a vote

NELLAI MURDER: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைக்கான காரணத்தை வாக்கு மூலமாக தெரிவித்த குற்றவாளி.

நேற்று, செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாக ஒளிபரப்பப்பட்ட செய்தி நெல்லை நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடந்த கொலை சம்பவம் தான். அந்த கொலையை செய்த குற்றவாளி கொடுத்த வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்முகம் என்பவர் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கு மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23) இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இளைய மகனான மாயாண்டி கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தன் சகோதரன் மாரிசெல்வம் உடன் நேற்று வந்து இருக்கிறார். அப்போது, அவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக கத்தியால்  வெட்டி கொலை செய்து விட்டு காரில் தப்பி சென்று இருக்கிறது.

அந்த கும்பலில் இருந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து இருக்கிறார்கள். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தான் கீழநத்தம் இந்திரா காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதை தெரிவித்து இருக்கிறார். மேலும், கொலைக்கான காரணத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் போலீசார் கீழநத்தம் வடக்கூர் சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூர் சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனோஜ் குமார் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.

அதாவது, தன் சகோதரன் ராஜாமணியை எவ்வித காரணமும் இல்லாமல் மாயாண்டி கொலை செய்தான் அதன் பலி வாங்கும் நடவடிக்கையாக நாங்கள் இதை அவரை கொலை செய்தோம் என்று கூறினார்.

Previous articleமீண்டும் சேதப்படுத்தும் கோவில் சிலைகள்!! வங்கதேசத்தில் நடப்பது என்ன?
Next articleதொடர் விடுமுறை காரணமாக பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!!