ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

0
201
The act of a mouse favorite farmer! Surprise for that area!
The act of a mouse favorite farmer! Surprise for that area!

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல்  சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார்.

இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் காரணமாக நெல் பயிர்களை நாசம் செய்து வந்திருக்கின்றன. இதனால் ரமேஷ் எலிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தார். ஆனால் அந்த எலிகளை கொல்ல அவருக்கு மனசு வரவில்லை. இந்த நிலையில் அவர் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை வைத்து வழி படுவோம் அல்லவா? விநாயகரின் வாகனங்களில் முக்கியமாக கருதப்படுவது எலி ஆகும். எனவே தனது வயல் வெளியிலிருந்து ஒரு எலியை பிடித்து வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்துள்ளார். ஒரு எலியை தனது கையில் பிடித்து கட்டிய அவர் கோவிலுக்குச் சென்று விநாயகரின் முன் அந்த பையை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

அதன் பிறகு நெல் வயலில் இனி எலி தொல்லை இருக்கக் கூடாது எனவும், அதனை தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த பையை திறந்துவிட்டார். அதன் காரணமாக எலி அங்கிருந்து ஓடிவிட்டது. அதன்பிறகு தனது வேண்டுகோளை கடவுளிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவரும் சென்றுவிட்டார். தனது வயலில் நாசம் செய்யும் எலிகளை கொள்ளாமல் அவர் இவ்வாறு வேண்டி பூஜை செய்தது, அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Previous articleஇப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!
Next articleஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்