இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

0
86
Should students face such a choice? The actor who questioned the government!
Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன.

இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பலர் தற்கொலையும் செய்து வருகின்றனர். இந்த தேர்விற்கு பல சோதனைகள் மேற்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.

ஆனால் இதிலும் ஆள்மாறாட்டம் செய்து விடுகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சி தேர்தல் அறிக்கையில் இந்த தேர்வை தடை செய்வோம் என கூறிய நிலையில், இந்த தேர்வுக்கு எதிராக இருந்த அணைத்து வழக்குகளையும் கோர்ட் ரத்து செய்து தீர்பளித்ததன் காரணமாக இன்று தேர்வுகள் உறுதியாகி உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் என்ற நுழைவு தேர்வு தற்போது அமலில் உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தம் 13 மொழிகளில் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர், இந்த கொரோனா நோய் தொற்றுக்கு இடையிலும் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டை மட்டும் பொருத்தவரையில் 40 ஆயிரத்து 376 மாணவர்கள் மற்றும் 70 ஆயிரத்து 594 மாணவிகள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 10,10,971 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு அநீதியான தீர்வை இன்று 1.10 இலட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று வேதனை பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என மேடைகளில் பேசிய அரசியல் தலைவர்களை பற்றிய  இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1436902459918602249%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FState%2F2021%2F09%2F12131021%2FStudents-are-facing-an-unfair-exam-Kamal-Haasan.vpf