மேடையில் சில்க் செய்த செயல்.. – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி.. – அப்படி என்ன நடந்தது?

Photo of author

By Gayathri

மேடையில் சில்க் செய்த செயல்.. – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி.. – அப்படி என்ன நடந்தது?

Gayathri

Updated on:

மேடையில் சில்க் செய்த செயல்… – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி… – அப்படி என்ன நடந்தது?

1980களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்ணுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகை கதாநாயகிக்கு இணையான கோடான கோடி ரசிகர்களை கொண்டிருந்தார் சில்க். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தார்.

அதுமட்டுல்லாமல் கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஒரு கவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். சில்க் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

தெலுங்கு பட உலகில் இவரின் கால்ஷீட்டை பெற தயாரிப்பாளர்கள் போட்டி போட்ட காலம் உண்டு. அந்த அளவிற்கு சில்க்கிற்கு என்று தனி இடம் உண்டு. சில்க் நிஜ வாழ்வில் ரொம்ப தைரியமானவராம். எதற்கும் பயப்பட மாட்டாராம். ஆனால், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினையால் அதே தைரியம் அவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டிவிட்டது. இவரின் மரணச் செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்தினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆனால், சில்க் செய்த காரியத்தால் சிவாஜி கடுப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஒருமுறை நடிகர் சிவாஜி ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவிற்கு சில்க் வந்துள்ளார். சிவாஜி மேடைக்கு வந்தபோது, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம். ஆனால், சில்க் எழுந்து நிற்கவில்லையாம். அமர்ந்து கொண்டே இருந்தாராம். ஒரு சிலர்  சைகை காட்டி எழுந்திருக்க சொன்னார்களாம். ஆனால், சில்க் எழுந்திருக்கவில்லையாம். இதை சற்று கவனித்த சிவாஜி, மேடையில் பேசும்போது, ‘சிலுக்கு திமிரு புடிச்சவன்னு கேள்வி பட்டுக்கேன்.. அது உண்மைதான் போல’ என்று கிண்டலாக சொன்னாராம்.

இந்த விவகாரம் திரையுலகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பத்திரிகைகளில் இந்த செய்தியாக வெளிவந்ததாம்.