பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேச பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற செய்திகள் அதிகளவு வந்து கொண்டே உள்ளது. சில பழங்குடி இன மக்களின் வாழ்வியல் மாறியதற்காக கூட பெண்களுக்கு சில நூதன தண்டனைகளை வழங்கி, அதை விடாவாக வெளியிட்டும் வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், லலித்பூர் என்ற மாவட்டத்தில், தம்னா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி அந்த பெண் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்தப் பெண்ணோ அவர்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் அந்தப் பெண்ணின் வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து, மேலும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியும், உள்ளனர். மேலும் ஒரு கட்டத்தில் தங்களின் லைட்டரில், ஒரு சிறிய கத்தியையும் சூடாக்கி அதை அப்பெண்ணின் கண்களில் சூடு வைத்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். ஆனால் அப்போது அந்த பகுதியில், போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டதன் காரணமாக, அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும்,  துரதிருஷ்டவசமாக அந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணை இரவு முழுவதும் தேடிய அவரது உறவினர்களோ, காலையில்தான் காயமடைந்த நிலையில் இந்த பெண்ணை பார்த்து உள்ளனர். உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதித்தனர். அதன் பின் காவல்துறைக்கு தகவலும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment