கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

Photo of author

By Hasini

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்பக்கம் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். மேலும் அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் யாரையும் சும்மா விடக்கூடாது என பலரை குறிப்பிட்டு, யாரையும் சும்மா விடக்கூடாது என்று குறிப்பிட்டதோடு கடிதத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். ரீத்தாவின் தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், என பலரையும் குறிப்பிட்டு உள்ளார்.

போலீசார் விசாரணையில் மாணவிக்கு பள்ளியில் இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.