பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!!
பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை விடுமுறையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை கூறியுள்ளது.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து விட்டது. அதன்படி நாளை சனிக்கிழமை 24-12-2022முதல் 01-01-2023 வரை 9 நாட்களுக்கு பள்ளி விடுமுறை எனவும் மீண்டும் பள்ளிகள் 02-01-2023 அன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை காலத்தில் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை முதல் அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படும் நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள செய்தியாவது;
அரையாண்டு விடுமுறை காலத்தில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் போல வீட்டுப்பாடங்கள் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக பள்ளிக் கல்வித்திட்டத்தில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 16 தொடங்கி இன்று வரை தேர்வுகள் நடைபெற்றது. பிளஸ் 2, பிளஸ்1 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிக கவனத்துடன் தேர்வுகள் நடத்தப்பட்டதுடன் விடைத்தாள்கள் விரைவாக திருத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.