பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

0
121
The action taken by the waiter in response! Shocked public!
The action taken by the waiter in response! Shocked public!

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி தாலுக்கா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டிஎஸ்.ஜெயதார் இரண்டாம் நிலை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அந்த தாசில்தார் உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

எனவே அந்த மகன் தனது தாயுடன் சிக்கோடிக்கு வந்து தாசில்தாரை சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றுள்ளார். உடனே தாசில்தார் அந்த விதவைப் பெண்ணிடம் ஆபாச முறையில் பேசி அத்துடன் நிற்காமல், பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். ஒரு படி மேலே போய் தனது பேண்ட்டை கழற்றி தனது உறுப்பையும் கட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்த அந்தப் பெண் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது மகன் ஊடகங்களிடம் அந்த செய்தியை தெரிவித்தார். மேலும் அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாக பேசி போராட்டத்தையும் நடத்தினார். அதற்கு பொதுமக்களும் உடன் இருந்தனர். அந்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.

மேலும் தாசில்தாரை அந்த விதவை பெண்ணும் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சேர்த்து அடித்து உதைத்தனர். அதில் தாசில்தாரை செய்த அந்த விதவைப் பெண் செருப்பால் அடித்து தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த இன்னொரு தாசில்தார் பிரிதம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரத்தைத் தொடர்ந்து அவர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அந்த தாசில்தாரை பற்றி அந்த அலுவலகத்தில் இவர் இப்போது இது போல் நடந்து கொள்ளவில்லை. அவருடன் வேலை பார்த்த, அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் இடமும் கூட இப்படி தகாத முறையில் நடந்துகொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

Previous articleநெசவாளர்களின் வருவாயை உயர்த்த., அரசு ஊழியர்கள் இந்த ஆடை அணிய வேண்டும்!! முதல்வர் அறிவுறுத்தல்!!
Next articleகர்ப்பம் தரிப்பதற்கு தடை! ஜிகா வைரஸ்!