விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

Photo of author

By Hasini

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

Hasini

The action taken by the worker for fear of trial! The tragedy that followed!

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

இப்போதுள்ள சூழ்நிலையில் யார் யாரோ என்னென்னவோ தவறு செய்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரோ ஒரு சிறு தவறுக்காக பயந்து போய் இவ்வாறு செய்துள்ளார். போன உயிர் போனது தானே. திரும்பவும் வருமா? என்ன? தவறு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. 40 வயதான இவர் ஒரு தொழிலாளி. இவர் வளவனூரை சேர்ந்த உமா என்பவருக்கு வட்டிக்கு பணம் வசூலித்து கொடுக்கும் வேலையையும் சேர்த்து செய்து வந்தார். இந்தநிலையில் உமாவிடம் புதுச்சேரி மாநிலம் திருபுவனை கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கடன் வாங்கி இருந்தார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுனினால் அந்த கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.  அதனை தொடர்ந்து கடனை திருப்பி செலுத்தும் படி ரவியும், உமாவும் இளங்கோவை மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இளங்கோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் உமா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைதும் செய்தனர்.

இந்த நிலையில் தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில்  இருந்த ரவி, கோலினூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.