திருவிளையாடல் படத்தில் அவர் பேசிய “என்னடா மதுரைக்கு வந்த சோதனை ” என்ற டயலாக் இன்று வரை படங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ஒரு செருக்கான கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கேட்ட பின், அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன் அவர் கொடுக்கும் முக பாவனைகள் அனைத்தும் நம்மளை மிரள வைக்கும். பார்க்கின்ற நமக்கு சிவாஜி அளவுக்கு ஒரு நடிப்பை அங்கு பாலையா வெளிப்படுத்தி இருப்பார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் எப்படி சிவாஜியின் நாதஸ்வரத்தையும் பத்மினியின் நாட்டியத்தை மறக்க முடியாதோ அது போல் இவர் அடித்த மேளத்தையும் மறக்க முடியாது.
திருவாரூர் வரை போயிட்டு வரேன்’ என்பார் சிவாஜி. ‘தம்பி நானும் வரேன் தம்பி’ என்றார் பாலையா. ‘அங்கே எனக்கு பீடாக்கடைக்காரனைத் தெரியும்ணே’ என்பார் சிவாஜி. சட்டென்று இவர் ‘எனக்கு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்பார்.
ரயில் காட்சியில் இவர் செய்யும் நகைச்சுவை சேட்டைகள் தான் ஹிட். எல்லாவற்றுக்கும் மேலாக,
‘நலந்தானா’ பாட்டில் சிவாஜி வாசித்துக் கொண்டே இருக்கும் போது, அந்த வாசிப்பில் நெகிழ்ந்து வியந்து, சிவாஜியை அப்படி லேசாகத்தொடுவார். அந்த காட்சியில் அப்படியே நம்மை மீறி அழவைது வியக்க வைப்பார்.
பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில் வரவு எட்டணா’வை பாடலில் இவரின் நடிப்பு அசாத்தியமானது. மூன்று மகன்களையும் மருமகள்களையும் கவனிக்கிற, கவனித்துப் பொருமுகிற, கிண்டல் செய்யும் கேரக்டர் ரொம்ப அற்புதமாக செய்திருப்பார்.