ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

Photo of author

By Sakthi

ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

Sakthi

 

ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

 

தமிழ் திரையுலகில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகர் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

கடந்த 2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீராம் நட்ராஜன் அவர்கள் ஆவார். அதன் பிறகு இவர் நடித்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

 

அதன் பிறகு சோன் பப்டி திரேப்படத்தில் நடித்தார். பிறகு வில் அம்பு திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ 2017ம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நான்கு நாட்களில் போட்டியிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு 6 வருடங்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீ தற்பொழுது மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

 

இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீ அவர்கள் நடித்துள்ளார். இறுகப்பற்று திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, விதார்த், அபர்நதி, ஸ்ரத்தா ராம ஸ்ரீநாத், சானியா அய்யப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இறுகப்பற்று திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.