புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

0
77

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

 

 

புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

 

புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முந்தைய நாள் புத்தகமில்லா தினமாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தது.

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மாணவர்களின் பாடச்சுமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை போக்குவதற்காகத்தான் என்றும் இந்த நாட்களில் மாணவ,மாணவியர் யாரும் புத்தகப் பையை பள்ளிக்கு எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

 

இதன்படி,இம்மாதத்தின் இறுதி நாளான இன்று பள்ளி மாணவர்கள் அனைவரும் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.மேலும் இன்றைய தினம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக வினாடி வினா,கைவினை பொருட்கள் செய்தல்,விளையாட்டு,விவாத நிகழ்வு போன்றவை நடத்தப்பட்டது.இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

 

இந்நிலையில் புதுவை கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.