நடிகர் ரஜினிகாந்தை அடிக்கக் கூடிய தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறினார்!! பிரபல நடிகை பேட்டி!!

Photo of author

By Gayathri

“சிவாசிராவ் காயகவாடு” என்பது தான் சூப்பர் ஸ்டாரின் உடைய உண்மையான பெயர் ஆகும்.பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார்.

“அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தினை கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் முக்கிய உள்ளார். சினிமா துறையில் நுழைந்த பொழுது பெரும்பான்மையாக வில்லன் கதாபாத்திரத்திலேயே இவர் நடித்து வந்துள்ளார்.

இதன் பிறகு அவர் நடிக்க ஆரம்பித்த படங்களில் கிடைத்த வெற்றியின் காரணமாக தன்னுடைய ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் உடைய ஒரு படத்தில் இவரை கதாநாயகி அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்காக ரஜினி அவர்களே என்னை அடிக்க இந்த பெண் தான் சரியாக இருப்பார் என்று ஒருவரை முடிவு செய்துள்ளார். அதை குறித்த சுவாரசியமான தகவல்களை இங்கு பார்ப்போம்.

1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான மன்னன் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.இதில், ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில், முதலில் குஷ்பூவை ஜோடி போல காண்பித்து பின் விஜயசாந்தி சூழ்நிலை காரணமாக ரஜினியின் மனைவியாக மாறுவார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு விஜயசாந்திதான் பொருத்தமாக இருப்பார் என ரஜினியே விஜயசாந்திக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.

ஆனால், விஜயசாந்தி அவர்கள் பல படங்களில் கமிட்டாகியிருந்ததால் இதில் நடிக்க முடியாது என மறுக்கவே, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீண்டும் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்காக கதையைக் கேட்டு விஜயசாந்தி அவர்கள் அவரை அடிக்கக்கூடிய காட்சி தனக்கு வந்திருப்பதால் நடிக்கவே முடியாது என மறுத்துவிட்டாராம். எனினும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீண்டும் விஜயசாந்தி அவர்களுக்கு அழைத்து என்னை அடிக்க வேண்டும் என்றால் அது உங்களால் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால்தான் இந்த படத்தில் நான் நடித்தேன் என்று விஜயசாந்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படத்தின் 100வது நாள் விழாவிலும் சிவாஜி உட்பட பல நடிகர்கள் கூடியிருந்த மேடையில் ரஜினி என்னை அடிக்க தகுதி உள்ள நடிகை விஜயசாந்திதான் என கூறினாராம். இதை ஒரு பேட்டியில் விஜயசாந்தியே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.