ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.
ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் என்று சொன்னார்களாம். அதனால் மிகவும் குழப்பம் அடைந்த ஷாம் தனது நண்பரிடம் இந்த விஷயத்தை கேட்டிருக்கிறார். எனவே அவரது நண்பர்களும் நீ டப்பிங் செய்யாதே என நண்பர்கள் அறிவுரை கூறியிருக்கின்றனர்.
எனவே ஷாமும் நான் டப்பிங் செய்ய மாட்டேன். நான் சம்பளத்தை கொடுத்தால் தான் நான் டப்பிங் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளரிடம்.
அந்த தயாரிப்பாளரோ மிகப்பெரிய பார்ட்டி. அதனால் ஷாமிடம் சொல்லியிருக்கிறார் நீ டப்பிங் செய்யாமல் எப்படி உயிரோடு நடமாடுகிறாய் என்று நான் பார்க்கிறேன் என்று சொல்லவும் ஷாம் மிகவும் பயந்துவிட்டார்.
இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்துக் கொண்டே இருந்திருந்துள்ளார் அவர்.
உடனே நடிகர் மன்ற சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் இடம் இதை சொல்லலாமா வேண்டாமா என யோசித்து அதன் பின் இவரிடம் சொன்னால்தான் இது சரியாக வரும் என்று இரவில் அவருக்கு ஒரு போன் செய்துள்ளார்.
இந்த மாதிரி நான் நடித்த படத்திற்கு சம்பளத்தை தரவில்லை. அதனால் நான் டப்பிங் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் கொடுத்தார்கள். அதனால் இரவெல்லாம் தூங்காமல் அங்கே அங்கே அலை மோதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என போன் செய்து அழுதாராம்.
இதைக் கேட்ட விஜயகாந்த் நீங்கள் அமைதியாக நிம்மதியாக போய் உறங்குங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். மேலும் அடுத்த நாள் காலையில் உங்களுக்கு பணம் வரும். செக் அல்லது கேஷ் ஆக வரும். செக் வந்தால் பணத்தை அக்கவுண்டில் போட்டு உங்களுக்கு கிரெடிட் ஆகும் வரை டப்பிங் செய்யாதீர்கள், என்று சொல்லி போனை வைத்து விட்டாராம்.
அடுத்த நாள் காலையில் பணம் வந்துவிட்டதாம். பின் டப்பிங் பேச சொல்லி கிளம்பி இருக்கிறார்கள்.
உடனே விஜயகாந்த் வீட்டிற்கு உடனடியாக விரைந்த ஷாம், அவரது காலை பிடித்துக் கொண்டு நீங்கள் இல்லை என்றால் என்னுடைய உயிரை போயிருக்கும் என்று கதறி அழுது இருக்கிறார்.
நான் உன்னை மாதிரி இருக்கும் சமயத்தில் எனக்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது. எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தது. மதுரைக்கு ஓடிப்போ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அதனால் தான் உன்னுடைய துன்பம் எனக்கு புரிந்தது இனிமேல் நீ நிம்மதியாக தூங்கு என்று விஜயகாந்த்
சொல்லி இருக்கிறார்.