படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!

Photo of author

By Gayathri

படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!

Gayathri

The actor who dared to sacrifice his eyes for the film!!

அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி அவர்கள் குக்கூ படத்திற்காக பட்ட கடினம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் குக்கூ. இது திரைப்படத்தில் பார்வை இல்லாதவர் போல் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடித்திருப்பார். அவர் அவ்வாறு நடித்ததன் விளைவாக அவருடைய கண்கள் நான்கு ஆண்டுகள் வரை அப்படியே இருந்ததாக மாறி செல்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மாரி செல்வராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

நான் ராம் சார் கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிட்டு இருக்கும் பொழுது குக்கூ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சர் காண இன்விடேஷனை எடுத்துக்கொண்டு அட்டகத்தி தினேஷ் அவர்கள் வந்தார் என தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் இன்விடேஷன் வைக்க வந்த பொழுது அவருடைய கண்கள் படத்தில் நடித்தது போலவே தான் இருந்தது. ஆடியோ லாஞ்சில் கூட அவருடைய கண்கள் சரியாக மாறவில்லை. நான்கு வருடங்கள் கழித்து தான் நான்கு வருடங்கள் கழித்து தான் அவருடைய கண்கள் சீரானது என அறிந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.