படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறக்கும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!!

Photo of author

By CineDesk

படப்பிடிப்பு களத்தில் தவறி விழுந்த நடிகர்!! 8 தையலுக்கு பிறகும் தொடர்ந்து தனது காட்சியில் நடிக்கிறாராம்!!

பிரபல தமிழ் திரைப்படம் இயக்குனர் சேரன். மேலும் இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப் மாற்றம் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சொல்ல மரந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற பல திரைப் படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார்.

இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதை தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதன் பிறகு கமலஹாசனுடன் இணைந்து மகாநதி திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார்.

மேலும் இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் அண்மையில் இயக்குனர் சேரன் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேரன், கௌதம் கார்த்திக் உட்பட பல நடிகர்கள் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் நடித்து உள்ளனர். மேலும் இத்திரைப்படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.மேலும் வீடு ஒன்று படத்தில் பிரதானமாக இடம் பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் சேரன் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனுக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு உள்ளது. மேலும் சேரன் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை நடித்துக் கொண்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.