நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாத சினிமா துறையில் பல விஷயங்களில் சாதித்து வந்திருக்கிறார். நடிப்பை தாண்டி தயாரிப்பு நடனம் என சினிமா துறையில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் தன் திறமைகளின் மூலம் சாதித்துக் காட்டிய சிறப்பு வாய்ந்தவர் கமலஹாசன் என்று கூறுவதில் பெருமிதம் உள்ளது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில், கமலஹாசன் அவர்கள் தன்னுடைய கேரவன் மீது கூட அதிக அளவு கவனம் எடுத்துக் கொள்வதாகவும் அந்த கேரவனை தமிழகத்திற்கு பிரதமர் வந்தார் என்றால் பயணம் செய்வதற்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் ஏதேனும் தேவை இருக்கிறது என்றால் பயன்படுத்திக் கொள்வதற்கும் கமலஹாசனுடைய கேரவன் பயன்படுத்தப்படுகிறதாம்.
கேரவனினுடைய சிறப்பு அம்சம் :-
7 ஸ்டார் ஹோட்டல் போல காட்சியளிக்க கூடிய இந்த கேரவனில் நான்கு பக்கமும் ஏசி பொருத்தப்பட்டு இருக்கிறதாம். இந்த ஏசிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை மாற்றுவதற்காக ஸ்பேர் ஏசிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டிருப்பதாகவும் 2 மேக்கப் ரூம்கள் மற்றும் டைரக்டர் தயாரிப்பாளர் என யாராவது வந்தால் அவர்களுடன் கலந்து பேசுவதற்கு தனியாக மீட்டிங் ஹால் என பல்வேறு வசதிகள் இந்த கேரவனில் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த காரவனை ஓட்டுவதற்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்ட சிறப்பு ஓட்டுனர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஒருவேளை கமலுக்கு இந்த கேரவனில் ஏதேனும் சரியில்லை என்று தோன்றினால் உடனடியாக அதை அவர் மாற்றி விடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.