தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!!

Photo of author

By CineDesk

தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் தீனா திரைப்படத்திற்கு பிறகு இவரின் ரசிகர்கள் இவரை தல என்று அன்புடன் அழைத்தனர். மேலும் இவருக்கு அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது.

மேலும் அஜித்குமார் கார் பந்தயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார். மேலும் போர்பஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்தியா புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித்குமார் 61வது இடத்தை பெற்று இருந்தார். மேலும் 2014 ஆண்டிற்கான பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 வது இடத்தை பிடித்தார். மேலும் 2013ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் இவர்தான். இவர் தமிழில் 60 திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் இவரின் 60 வது திரைப்படமான வலிமை திரைப்படம் தற்போது தான் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அண்மையில் வெளியானது.

இதை தொடர்ந்து இவருக்கு திருப்புமுனையாக இருந்த தீனா திரைப்படத்தில் இவரை தாண்டி சில நடிகர்களும் பெரிய அளவில் பிரபலமானார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சம்பத் ராவ். அவர் ஒரு பேட்டியில் பேசுகையில் தீனா படத்தின் மூலம் தான் நான் மக்களிடம் ரீச் ஆனேன் அதற்காக அஜித் சாருக்கு பெரிய நன்றி. தீனா படத்தில் நடிகர் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக் என்னுடையது தான். ஆனால் அந்த பைக்கை என் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போன சமயத்தில் விற்று விட்டேன். என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.