ஆகாயம் தமிழ் என்ற youtube சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் நடிகை ரேவதி குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தைரியமான பெண் என்றும் கிசுகிசுகளுக்கு அஞ்சாத பெண்ணென்றும் தேவதையை குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரேவதி குறித்து செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
பாரதிராஜாவின் இயக்கத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரேவதி முதல் நாள் படப்பிடிப்பு தளத்திலேயே பணத்தை விட்டு விலகி விடலாமா சினிமா துறையில் நமக்கு வேண்டாம் என்பது போன்ற முடிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்கு காரணம் பாரதிராஜா அவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் அனைவரின் முன்பும் அடித்து விடுவார் என்ற பயமே காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக தெரிவித்திருக்கிறார். அதிலும் தன்னால் ஒரு படத்தில் கிளாமராக நடிக்க முடியாது என்றும் இது போன்ற உடைகளை தருவீர்கள் என்றால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் படத்தில் ஒப்பந்தமாக முன்பே தெரிவித்து விடுவாராம்.
கமலுடன் நடிக்க வந்த ஒரு படத்தில் முத்தக்காட்சி உள்ளது எனக் கூறியதால் தான் அந்த படத்தில் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இயக்குனர் பலமுறை கேட்ட பொழுதும் என்னால் முடியவே முடியாது என தைரியமாக மறுத்தபின் இவர் என மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரக்கூடிய மற்றும் குடும்ப பாங்கான படங்களாக அமைந்து வெற்றி கண்டதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியவர் நடிகை ரேவதி. இவர் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் குழந்தையை தத்தெடுத்த கொள்ள முடிவு செய்து இருக்கிறார் என்றும் பல்வேறு வதந்திகள் வெளியான பொழுதும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்த்து வந்திருக்கிறார். அதன் பின்பு குழந்தையை தத்தெடுக்கவில்லை என்றும் 47 வயதில் தான் தனக்கு தாய்மை உணர்வு தோன்றியதாகவும் அதனால் தான் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்து டாக்டர்களை அனுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின் டெஸ்டிவ் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டு தான் வளர்ப்பதாகவும் நடிகை ரேவதி அவர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.