தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை! எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்!!

0
120
#image_title
தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை! எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை சித்தி இட்னானி அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த சித்தி இட்னானி இந்த படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை சித்தி இட்னானி தமிழில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெளியான வெந்து தனிந்தது காடு படம் மூலமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் ஆரியா அடுத்து நடித்து வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சித்தி இட்னானி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்த படத்தை பற்றி “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை. இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரு திரைப்படம்” என்று பதிவு போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் “உங்கள் படத்தை புறக்கணிப்போம்” என்று எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருகின்றனர்.