பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிய கவுன்சில்!!

0
97
#image_title
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆசிய கவுன்சில்.
வருடா வருடம் ஒவ்வொரு நாடுகளில் நடக்கும் ஆசியக் கோப்பை இந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டிகளை நடத்தும் ஆசிய கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட ஆசிய கோப்பையில் குரூப் ஸ்டேஜ், சூப்பர் 4, இறுதிப் போட்டி என மூன்று விதமாக நடத்தப்படும். இந்த ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் வேறு ஒரு நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று இந்திய அணி விளையாடுவதில் பிசிசிஐ மறுப்பு தெரிவித்து வருகின்றது. அவ்வாறு மறுப்பு தெரிவித்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடக்கும் செப்டம்பர் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆசிய கவுன்சில் இந்தாண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நாட்டிலிருந்து இலங்கை அணிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆசிய கோப்பை தொடரை வேறு நாட்டிற்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை.