சிவகார்த்திகேயனிடம் பந்தயம் போட்டு தன் பெயரை மாற்றிக் கொள்வதாக கூறிய நடிகை!!

Photo of author

By Gayathri

சிவகார்த்திகேயன் உடைய அமரன் திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது. அதனோடு மட்டுமின்றி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் களமிறங்கி வெள்ளித்திரைக்கு வந்தவர். தனுஷின் துணையோடு அவர் சினிமாவுக்குள் காலடி வைத்தாலும் தனது திறமையால் இன்று வளர்ந்து உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.

சினிமா துரை என்பது அவ்வளவு எளிதில் எந்த ஒரு நடிகரையும் உயரத்திற்கு கொண்டு போய் விட்டு விடாது. சில நேரங்களில் நம்முடைய படங்கள் ஓடவில்லையே என்று ஓய்ந்து விடாமல் மீண்டும் புத்துயிர் பெற்று அதைவிட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பதன் மூலம் தான் ஒரு ஹீரோவானவர் ரசிகர்களின் மனதில் பதிகிறார். அவ்வாறு தன்னுடைய வாழ்விலும் சாதித்த நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் குறித்து அவர் பேசியிருப்பதாவது :-

” ஜோடி நிகழ்ச்சியில் நிறைய டாஸ்க்கை நான் சிவகார்த்திகேயனுக்குத்தான் கொடுத்திருக்கிறேன். ஏனெனில் அவர் ரொம்ப திறமையானவர். அவர் மட்டும் ஹீரோவாகவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்றுகூட சொல்லியிருந்தேன். அவர் ஹீரோவாகிவிட்டார். அவரது வெற்றி என்பது ஒரு இமாலய வெற்றி. அதுமட்டுமின்றி அவர் வெற்றியடைந்தது பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும்” என்று அப்பொழுதே சிவகார்த்திகேயன் உடைய வளர்ச்சியை பற்றி பேசி இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் அவர்கள்.