அமரன் படத்தில் நடித்த நடிகை தற்போது தனது சம்பளத்தை உயர்த்தயுள்ளர்!!

Photo of author

By Vinoth

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 2 வாரம் மேல் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். அதில் கதாநாயகி நடித்தவர் சாய் பல்லவி அவர்கள். இந்த படத்தில் அதிக பங்கு மற்றும் படம் முழுவதும் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக  நடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி முதல் படமான பிரேமம் படத்தில் ஆசிரியராக கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி மருத்துவர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். அதன் பின்பு தனது நடிப்பு திறமை வெளியில் கொண்டு வந்தார் டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனார் . அவர் தனது திறமை மூலம் எந்த ஒரு ஆபாசம் இல்லாமல் தனது நடிப்பை திரையுலகத்திற்கு அளித்து வருகிறார். மேலும் அவர் பல மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படம் மூலம் குறைந்த சம்பளத்திற்கு நடித்து வந்த நிலையில் தற்போது வெளியான அமரன் படம் பாக்ஸ் ஆபீசில் அதிகபடியான வசூல் செய்தது வருகிறது.

அமரன் படத்தில்  கடைசி நிமிட காட்சிகளில் செம ஸ்கோர் செய்துவிட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 3 கோடி ஆனால் படம் அதிக படியான வசூல் செய்ததால் அவர் வரும் காலங்களில் தனது சம்பளம் 6 கோடி என நிர்ணத்தார்.