முதல்வரிடம் உதவி கேட்ட நடிகை!! கண் கலங்க வைக்கும் செய்தி!!
தமிழ்நாட்டில் பல சமூக அக்கறை கொண்டவர்கள் உள்ளனர். அதில் முக்கியமாக சினிமா துறையில் சிறந்த விளங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் இவரை தேடி வரும் மக்களுக்கு நீதி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவர் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கும் பொறுப்பில் பல நன்மைகளை செய்து பல பெண்களுக்கு உதவியுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிவரும் வெளிநாட்டில் வேலைக்காக சென்ற 3 இளம் பெண்களை அந்த நிறுவனத்தின் முதலாளி அவர்களை கொடுமைபடுத்தி வருவதாக அதில் ஒரு பெண் அழுதவாறு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த அனைவருக்கும் வெளிநாடு சென்று வேலை செய்வது குறித்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த வீடியோவை பார்த்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் தாழ்மையுடன் முதல்வருக்கு செய்தி ஒன்றினை கூறியிருந்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் முதல்வரிடம் கேட்டுக்கொண்டது தயவுசெய்து இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கொடுங்கள் ஐயா. அடுத்த நாட்டில் சிக்கி கொள்ளும் வலி மிகவும் கொடுமையானது. தங்கள் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். ஆனால் செல்லும் அனைவருமே பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருப்பது கிடையாது. ஒரு சிலர் தவறான வழிகாட்டுதலால் சட்டத்தை மீரியவர்களாகி அங்கே மாட்டிக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் இதற்காக உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் அந்த மூன்று இளம் பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.