மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்!

0
119

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்!

இந்த டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தற்பொழுது பல உயிரைக் கொல்லும் பொருட்கள் வந்து விட்டது.சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை ஜார்ஜரில்  போட்டுவிட்டு  அப்படியே உபயோகம் செய்யும்போது போனின் வெப்பநிலை அதிகமாகி சிலநேரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதேபோல இரு தினங்களுக்கு முன்பு அவரது அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் அனைவரும் கூட்டாஞ்சோறு விளையாண்டு உள்ளனர். அவ்வாறு விளையாடும் போது மண்ணெண்ணை என்று நினைத்து சனிடைசரை விறகு எரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு அதனை பயன்படுத்தியபோது தீ மளமளவென பற்றி குழந்தையின் உடலின் மீதும் பற்றி எரிய ஆரம்பித்தது.அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.இவ்வாறு தொடர்ந்து பல சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் .இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.இவர் மகளின் பெயர் நிவேதா.இவரது மகளுக்கு ஆறு வயது ஆகிறது.அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது குழந்தைகள் பெரும்பாலும் அழுகையில் அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து சமாதானம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.அவ்வாறு தன் மகளுக்கு பிடித்த மிக்சரை ராஜேஷ் வாங்கி தந்துள்ளார்.அவரது மகள்  நிவேதா  மதிய உணவு சாப்பிடும்போது மிக்சர் கொடுத்துள்ளார்.அவ்வாறு அக்குழந்தை நிவேதா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்டதும் அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

தூக்கி சென்ற வழியிலேயே குழந்தை நிவேதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு தன் உயிரை இழக்க நேரிட்டது.மருத்துவர்கள் கூறுகையில்,குழந்தை சாப்பிட்ட மிக்சரியிலுள்ள கடலையானது மூச்சுக்குழாயில் மாட்டிக்கொண்டது.அதனால் குழந்தை நிவேதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது என இவ்வாறு கூறினார்கள்.மேலும் போலீசார் இதனை வழக்குப்பதிவு செய்தனர்.இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் சிற்றுண்டி குழாய் வழியாக அந்த கடலை அவருடைய மூச்சு குழாயில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.பெற்றோர்கள் கொடுத்த உணவே அந்த குழந்தைக்கு விஷமாக மாறியது என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.