நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு! 

0
284
The actress who started the nude protest! Allegation that the famous producer cheated me!
The actress who started the nude protest! Allegation that the famous producer cheated me!

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு!

தெலுங்கு திரையுலகில் மிக புகழ் பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பன்னி வாசு.இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவர் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார்.இந்நிலையில் பன்னி வாசு மீது துணை நடிகை போயா குற்றம் சாட்டி வருகின்றார்.

இவை தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுனிதா போயா பன்னி வாசுவின் தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் தீடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருடைய ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி காணப்பட்டது.மேலும் இந்த போராட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து சுனிதா போயோவை அழைத்து சென்றனர்.

மேலும் பெண் போலீசார்கள் சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்தனர்.தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை புரிந்ததும் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்கள்.

தாயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறை இல்லை முன்னதாகவே இதுபோல பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.இந்நிலையில் கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த போராட்டத்தின் பொது புகார் அளிக்கப்பட்டது ஆனால் போலீசார் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் நான் மீண்டும் போராட்டம் நடத்தினேன் என சுனிதா போயா கூறியிருந்தார்.மேலும் அவர் கூறுகையில் பன்னி வாசுவின் தொல்லை தாங்க முடியாமல் நான் நான்கு முறை மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறினார்.இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்?
Next articleஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!