பிரபாஸ் நடிப்பில் சாஹோ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டு வேண்டாம் என கூறப்பட்ட நடிகை!!

நடிகர் பிரபாஸ் என்னுடைய நடிப்பில் தற்போது தயாராகி வரும் சாஹோ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா தான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை தேர்வு செய்திருக்கிறது படக்கழு.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா ரெட்டி. இவர் தமிழில் விஜய், அஜித், ரஜினி ஆகியோருடனும் தெலுங்கில் நாகார்ஜுனா, ரவி தேஜா, பிரபாஸ் ஆகியோருடனும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பாகுபலி படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் பிரபாஸின் உடன் சாஹோ படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இவருடைய உடல் எடை காரணமாக இந்த படத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டு தமிழில் டப் செய்து வந்த அருந்ததி படமே இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமாக வாய்ப்பாக அமைந்தது.

மேலும் அதனைத் தொடர்ந்து விஜயுடன் வேட்டைக்காரன், சிங்கம் போன்ற படங்களில் நடித்தார். நடிகர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்திலும் நடித்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நிசப்தம் எனும் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மிஸ்டர் அண்ட் மிர்ஸஸ் பொலி ஷெட்டி படமும் வெளியாகி இருந்தது. தற்போது வரை அனுஷ்காவிற்கு கம்பேக் படமாக எந்த படமும் அமையவில்லை.

மேலும் பாகுபலி படம் வெளியான பொழுது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் இதனை மறுத்து இருந்தனர். தற்போது வரை அனுஷகாவால் மீண்டும் ஒரு வெற்றி படத்தில் நடிக்க முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் கேள்வியாகவே இருந்து வருகிறது.