மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!!

0
184
The Adventures of Jackie Chan is back!! 90s Kids Rejoice!!
The Adventures of Jackie Chan is back!! 90s Kids Rejoice!!

மீண்டும் வருகிறது  ஜாக்கி சான் சாகசங்கள்!! மகிழ்ச்சியில் 90s கிட்ஸ்கள்!!

அந்த கால 90s கிட்ஸ்களின் ஜாக்கி சான் மீண்டும் வருவதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ் என்பது அதிரடி கார்ட்டூன் திரைப்படம் ஆகும். இதில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சான் கற்பனை பதிவில்  பல சாகசங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் இது ஒரு அனிமேஷன் தொலைகாட்சி தொடராகும்.

இந்த தொடர் 90s காலக்கட்டத்தில் ஒளிபரப்பட்டது. மேலும் இந்த தொடர் 95 எபிசோடுகள் மற்றும் 5 சீசன்கள் கொண்டது. இந்த தொடர் பல்வேறு நாடுகளில்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனையடுத்து இது பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதனுடன் இது தமிழ் மொழியிலும் ஒளிபரப்பட்டது .

தமிழில் சுட்டித்  தொலைக்காட்சியில் மற்றும் கன்னடத்தில் சின்டு தொலைகாட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இதில் சாகசங்கள், மந்திரங்கள் மற்றும் மந்திரக் கல் போன்ற வேடிக்கையான பல  விஷயங்கள் இருப்பதால் 90s கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அதில் 12 மந்திரக்  கல், 10 முகமூடி மற்றும் 8 அரக்கர்கள் போன்ற அனிமேஷன் காட்சிகள் ரசிகர்களை ஆர்வமுடன் பார்க்க வைத்தது. இந்த தொடர் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் ஒளிபரப்பபடும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை 8 மணி முதல் 10  மணி வரை மற்றும் மாலை 4 மணி  முதல் 6 மணி வரை சுட்டி டிவியில் பழையபடி ஒளிபரப்படுகிறது.

Previous articleஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!
Next article மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!