தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?

Photo of author

By Vijay

குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ணக்கொடி அச்சிடப்பட்ட பல பொருட்கள் வெகுவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அமேசான் நிறுவனம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனம், தேசியக்கொடி அச்சிடப்பட்ட சாக்லேட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள், மற்றும் கீ செயின் போன்றவற்றை விற்பனைக்காக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது. குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இது தேசியக்கொடி அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் அமேசானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தேசியக்கொடிக்கு, தனி மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தேசியக்கொடியை அவமரியாதை செய்த e-commerce நிறுவனமான அமேசான் நிறுவனம் மீது வழக்குத் தொடரும் படி உத்தரவிட்டுள்ளதாக ,மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.