எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

0
131

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விடாப்பிடியாக தெரிவித்திருக்கின்றார். உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு எனவே தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு சென்ற செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கின்றது. மொத்தம் இருக்கும் 386 இடங்களுக்கு 3030 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுடைய தரவரிசை பட்டியலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டு பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மீன்வள பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கையில், கடலோர உள்நாட்டு மீனவர்களின் வாரிசுகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதோடு இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள், கடலில் காணாமல் போனவர்களுடைய, வாரிசுகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு தமிழகத்தின் உரிமைகளை ஆட்சியில் இருந்தபோது தாரைவார்த்து விட்டு தேர்தல் சமயத்தில் திமுகவினர் மக்களை சந்திப்பதால், எந்த ஒரு பயனும் ஏற்பட்டுவிடாது எனவும், மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கமே அதிமுக என்றும், மீண்டும் தேர்தல் வந்தால் மக்கள் அதிமுகவை அரியணையில் ஏற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும், தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பேசிய அவர் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை கட்சி செய்து வருவதாகவும், பிரசாந்த் கிஷோர் எழுதிக் கொடுக்கும் தலைப்புகளில் என்ன செய்தாலும் திமுகவால் தேர்தலில் சாதித்துவிட இயலாது எனவும், கனிமொழி போன்றோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரையில் பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleஅமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!
Next articleஇனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!