ADMK BJP: திமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதிலிருந்து தொடர் தோல்விகளையே எடப்பாடி சந்தித்து வருகிறார். இதை சரி கட்டவே மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஒரு பக்க தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் ஒவ்வொரு முறையும் பதில் அளித்து வருகிறார். இருப்பினும் இவரது பேச்சுக்கள் அனைத்தும் வாய் வார்த்தை வரை தான், பின்னணியில் இவரது கூட்டணி அமைய பலவித முகாந்திரம் உள்ளதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இரு கட்சிக்கும் இடையேயான பனிப் போரானது குறைந்து வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை நேற்று கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, முன்பெல்லாம் எங்களுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் தான் தோற்றம் எனக் கூறியவர்கள் தற்பொழுது எ ங்களுடன் கூட்டணி வைக்க தவமாய் தவம் இருக்கிறார்கள். அத்தகைய சூழலை பாஜக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர், இதற்கு பெருமைப்படுவதாக கூறியிருந்தார்.
இவ்வாறு அவர் அதிமுக பெயரைக் குறிப்பிடாமல் நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இங்கு கூட்டணிக்காக யாரும் தவம் இருக்கவில்லை, அதேசமயம் அண்ணாமலை கூறியது எங்களை கிடையாது. மேலும் எங்களுடைய ஒரே ஒரு அரசியல் எதிரி திமுக தான் என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் யாரும் தவம் கிடக்கவில்லை என்று கூறியது இறுக்கட்சிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.