ADMK BJP: தமிழகத்தில் நடைப்பெறப்போகும் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 மாதக்காலம் இருந்தாலும் நாளுக்குநாள் அதன் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது கட்சி தொடங்கிய விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருக்குமா என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அதிமுக எடப்பாடி முதல் பாஜக , விஜய் என அனைவரும் தங்களின் ஒரே எதிரியாக திமுக-வை குறிவைத்துள்ளனர்.
இதனை மையமாக வைத்து தான் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட போது சமரசமான நிலைப்பாடு என்பதே இல்லை. மாறாக கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தெல்லாம் இவர்களுக்குள்ளே போட்டி நிலவி வந்தது. நாளடைவில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இதனை மறுத்த தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருக்கும் பல கட்சிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜவில் இணைந்ததோடு அதன் தலைவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் பாஜகவில் இனைவதற்கு முன்பு அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்திருந்தார். சில தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அதிமுகவிலிருந்து விலக நேரிட்டது. அதிலும் எடப்பாடி பாஜவிலிருந்து விலகியது இவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது மீண்டும் அதிமுக பாஜக வுடன் கூட்டணி வைத்ததில் இவருக்கு பெரும் அதிருப்தி, அதிலும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஒன்றில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் மதுரை ஏர்போர்ட்டுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு எடப்பாடி ஓட்டுக்காக கூறுவது அரசியல் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று கூட்டணியிலிருந்துக் கொண்டே எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியதற்கு தேவர் சாதியாரின் வாக்கு வங்கியை கவர தான் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதனை எதிர்த்து பேசியிருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கூடிய விரைவிலேயே பாஜகவிலிருந்து விலகும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.