கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர், முரளி. இவர் ஆம்னி ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று வைத்துள்ளார்.அந்த வாகனத்தில், டிரைவராக அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், அவருக்கு உதவி டிரைவராக ராகவன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹரிஷும் ராகவனும் மது அருந்திவிட்டு தலைக்கேறிய போதையில்,கரூர் திருச்சி சாலையில் தாறுமாறாக ஆம்புலன்சை இயக்கியுள்ளனர்.இதனை கண்ட மக்கள் ஆம்புலன்சுக்குள் ஏதாவது நோயாளி இருப்பார் அவசரத்திற்காக இப்படி இயக்குகிறார்கள் என்று வசைபாடினர்.
ஆனால் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சென்ற ஆம்புலன்ஸ் பி.வெள்ளாளப்பட்டி அருகே சென்றபோது சாலையின் ஓரமாக இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் ஆம்புலன்சை விட்டனர்.அந்த குடிசை முழுவதும் இடிந்து குடிசைக்கு பின்னாடி பின்பகுதியில் உள்ள மரக்கிளையில் அந்த ஆம்புலன்ஸ் தொங்கியது.அந்தளவிற்கு மது போதையில் ஆம்புலன்சில் ஓட்டி உள்ளனர்.
இந்த வாகனத்தை ஹரிஸ் என்பவர் இயக்கினார்.குடிசையினுள் விட்ட பின்பு ஹரிஷ் நடுரோட்டில் வீட்டைக் கட்டியது யார் என்று குடிபோதையில் தாறுமாறாக பேசினார் இதனைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள் காரினுள் இருக்கும் அவர்களை வெளியே இழுத்து வாக்குவாதம் நடத்தினர்.இதன் பின்பு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஹரிஸ் மற்றும் ராகவன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் மேலும் ஆம்புலன்சுக்கு சொந்தக்காரரான தலைமறைவான முரளியை போலீசார் தேடி வருகிறது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனரே குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டினால் பொதுமக்கள் என்ன செய்வது?இந்த ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகளின் கதி என்ன அவது?இதுபோன்று முறைகெட்ட ஆம்புலன்ஸ் ஓட்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மேலும் அந்த குடிசை வீட்டுக்குள் அந்த நேரத்தில் யாருமில்லாததால் அந்த குடிசையில் இருப்போரின் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பியது,யாராவது அந்த வீட்டினுள்ளிருந்து இருந்தால் அவர்களின் நிலைமை என்னாவது என்று எண்ணி அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பில் உள்ளனர்.